|
பொது
|
|
திங்கட்கிழமை, 04 மார்ச் 2013 15:33 |
|
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பல்மருத்துவ கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்க அனுமதி பெறுவதற்கு இந்திய பல்மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசனுக்கு லஞ்சம் கொடுத்தாக சி.பி.ஐ. கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்கு நேரில் ஆஜராகும்படி கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு, அவரது மகன்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து லட்சுமி பங்காரு, அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் பெற்றனர்.
இதையடுத்து இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகினர். அப்போது 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் வழங்கி முன்ஜாமீன் பெற்றுக்கொண்டனர்.இதையடுத்து, லஞ்சம் கொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி இவர்கள் இருவரும் சி.பி.ஐ. அதிகாரி முன்பு நாளை (மார்ச்.5) அன்று விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
|
|
|
பொது
|
|
சனிக்கிழமை, 02 மார்ச் 2013 19:24 |
|
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் புகாரை அதிபர் ராஜபக்ச மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ராஜபக்ச, பாலச்சந்திரனை ராணுவத்தினர் கொன்றிருந்தால் தமக்கு தெரிந்திருக்கும் என கூறியுள்ளார்.
ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் புகாரை மறுப்பதாக தெரிவித்த ராஜபக்ச, அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றார். போர்க்குற்றம் தொடர்பான புதிய காட்சிகள் பற்றி விளக்கமளித்த அவர், ஒருசார்பாக இதனை பார்க்கக்கூடாது என தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் குறித்து பேசிய ராஜபக்ச, தங்களின் பாவங்களை மறைக்க ஒவ்வொருவரும் இலங்கையை பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டினார்.
மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை மனித உரிமை ஆணையம் கண்டித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். தீர்மானம் குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தவில்லை என கூறிய ராஜபக்ச, தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா, வேண்டாமா என்பது பற்றி நட்பு நாடு என்ற முறையில் இந்தியா முடிவெடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்க சிலர் முயற்சிப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அதிபர் ராஜபக்ச தெரிவித்தார். போர்க்குற்ற புகாரில் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறிய ராஜபக்சே தாம் ஒரு புத்தவாதி என்பதால், தனக்கு சகிப்புத்தன்மையும் இரக்க உணர்வும் உள்ளதாக தெரிவித்தார்.
|
|
பொது
|
|
வியாழக்கிழமை, 28 பிப்ரவரி 2013 18:47 |
|
வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் ரூ. 50,000 மதிப்புள்ள தங்கமும், பெண்கள் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கமும் கொண்டு வரலாம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். இது ப.சிதம்பரம் தாக்கல் செய்த 8வது பட்ஜெட் ஆகும்.
வருமான வரியில் மாற்றம் இல்லாதது ஆறுதலாக உள்ளது. வீட்டு கடன் பெறுவோருக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும் என்று அவர் கூறியது பலருக்கு வீடு வாங்கும் எண்ணத்தை அளித்துள்ளது.
அவரின் குறிப்பிட்ட ஒரு அறிவிப்பு பெண்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் ரூ. 50,000 மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம் என்றும், பெண்கள் ரூ. 1 லட்சம் மதிப்பு வரை தங்கம் கொண்டு வரலாம் என்றும் அவர் அறிவித்தது தான் பெண்கள் மனதை குளிர வைத்துள்ளது.
|
|
|
பொது
|
|
வியாழக்கிழமை, 28 பிப்ரவரி 2013 18:52 |
|
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் பகல் கனவு பட்ஜெட் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க அறிவிப்புகள் இல்லாத இந்த பட்ஜெட், ப.சிதம்பரத்தின் பகல் கனவு பட்ஜெட். வெளிநாட்டு முதலீட்டை பெருக்குவதற்கு மட்டுமே மத்திய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வித அறிவிப்பும் இல்லை.
நிதிப் பற்றாக்குறையை மாநில அரசுகளை பயன்படுத்தி தீர்க்க மத்திய அரசு நினைக்கிறது. இந்த பட்ஜெட்டில் மாநில அரசுகளுக்கு எதிரான மத்திய அரசின் மனப்பான்மை தெளிவாகத் தெரிகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
|
|
தமிழகம்
|
|
வியாழக்கிழமை, 28 பிப்ரவரி 2013 17:11 |
|
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி சசி பெருமாளை, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் சசிபெருமாளின் உடல்நிலை குறித்து அறிய மருத்துவர்கள் அவரது ரத்தமாதிரியை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.ஜவாஹிருல்லா ,இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, பாரதிய ஜனதா மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் சசிபெருமாளை இன்று நேரில் சந்தித்தனர்.
சசிபெருமாளின் கோரிக்கையைப் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
|
|
|
|
|
|
|
பக்கம் 1 / 204 |